சென்னை, மார்ச் 12-
அஜீத், நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகம் ‘பில்லா-2’ என்ற பெயரில் தயாராகிறது. பில்லா படத்தில் டேவிட் என்ற சர்வதேச கடத்தல் மன்னன் வேடத்தில் அஜீத் நடித்தார்.
பில்லா-2 வில் அவரது கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இலங்கை தமிழ் அகதி வேடத்தில் அவர் நடிப்பதாக வதந்தி பரவு உள்ளது. தமிழ் அகதியான அவர் எப்படி சர்வதேச கடத்தல்காரனாக மாறுகிறார் என்பதுபோல் கதை சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் படக்குழுவை சேர்ந்தவர்கள் இதை மறுத்தனர். அஜீத் இலங்கை தமிழனாக நடிக்கவில்லை என்றும் தமிழகத்தில் இருந்து இலங்கை சென்ற தமிழ் தம்பதிக்கு பிறந்த மகனாக நடிக்கிறார் என்றும் கூறினர்.
இதன் சண்டை காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் ரகத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது இதில் கதாநாயகியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். சக்ரிபோலட்டி இயக்குகிறார். மே மாதம் இரண்டாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment